1 min read
அருணாச்சல பிரதேசம் திபத்தின் தெற்கு பகுதி-5 பேர் கடத்தப்பட்ட விவகாரத்தில் சீனா திமீர் பேச்சு
அருணாச்சல பிரதேசத்தில் இருந்து ஐந்து பேர் கடத்தப்பட்ட விவகாரத்தில் அவர்கள் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனரா என இந்திய இராணுவம் கேட்ட கேள்விக்கு சீனா திமிராக பதிலளித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கவே இல்லை.அது திபத்தின் தெற்கு பகுதி என திமிராக பதிலளித்துள்ளது சீனா.
யூனியன் அமைச்சர் கிரண் அவர்கள் ஐந்து பேர் கடத்தப்பட்ட சம்பவத்தில் சீன இராணுவத்திற்கு ஹாட்லைன் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.அவர்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் என இதற்கு முன் தகவல் வெளியிட்டிருந்தார்.
நாங்கள் அப்படி யாரையும் கடத்தவில்லை என சீனா பதிலளித்து உள்ளது.டிப்ளோமேட்டிக் அளவில் இந்த சம்பவத்தை கொண்டு செல்லாமல் லோக்கல் எல்லை நிலையில் மட்டுமே அருணாச்சல் காவல்துறை தேடுதல் நடத்தி வருகிறது.