சீனப்பிரச்சனை எதிரொலி ; இந்தியா-ஆஸ்திரேலியா கடற்படைகள் போர்பயிற்சி

  • Tamil Defense
  • September 22, 2020
  • Comments Off on சீனப்பிரச்சனை எதிரொலி ; இந்தியா-ஆஸ்திரேலியா கடற்படைகள் போர்பயிற்சி

லடாக்கில் சீனாவுடனான சண்டைக்கு பிறகு இந்திய கடற்படை கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தியுள்ளது நாம் அறிந்ததே.அதே போல் சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா போர்பயிற்சியும் செய்தது.அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பிறகு தற்போது ஆஸ்திரேலியாவுடன் இணைந்து கிழக்கு இந்திய கடற்பகுதியில் போர்பயிற்சி மேற்கொள்ள உள்ளது.

புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்கள் இந்த போர்பயிற்சி நடைபெற உள்ளது.இதில் ஆஸ்திரேலியா சார்பில் ஹோபர்ட் என்ற டெஸ்ட்ராயர் கப்பலும் இந்திய கடற்படை சார்பில் சயாத்ரி என்ற பிரைகேடு கப்பலும்,கார்முக் என்ற கார்வெட் கப்பலும் பங்கேற்க உள்ளன.

இவை தவிர இரு நாட்டு வானூர்திகளும் , பி8ஐ பொசைடான் விமானமும் கலந்து கொள்ள உள்ளன.இந்த பயிற்சி மூலம் இரு நாட்டு கடற்படைகள் இணைந்து செயல்படும் திறன் அதிகரிக்கும்.

குவாட் எனப்படும் சீனாவுக்கெதிரான கூட்டு படையில் ஆஸ்திரேலியாவும் உள்ளது.இந்த குவாட் நட்பு வட்டாரத்தை பலமிக்கதாக மாற்ற நான்கு நாடுகளும் முயன்று வருகின்றன.