1 min read
கடற்சோதனைகள் மற்றும் பயிற்சிகளை முடித்த சீனாவின் இரு விமானம் தாங்கி கப்பல்கள்
சீனாவின் இரு விமானம் தாங்கி கப்பல்களான லயோனிங் மற்றும் ஷான்டோங் கடற்சார் சோதனைகள் மற்றும் பயிற்சிகளை முடித்துள்ளதாக சீன தேச பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
விமானம் தாங்கி கப்பல்களின் திறன்,ஆயுதங்கள் மற்றும் ஆபரேசன்களில் சிறப்பாக செயல்படுதல் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லயோனிங் கடந்த 2012ல் சீன கடற்படையில் இணைந்தது.இரண்டாவது கப்பலான ஷான்டோங் கடற்சோதனையில் இருக்கும் நிலையில் மூன்றாவது கப்பலை சீனா தற்போது கட்டி வருகிறது.
சீனா ஆறு விமானம் தாங்கி கப்பல்களை கட்டி படையில் இணைக்க முயற்சித்து வருகிறது.
ஷான்டோங் 40000-60000டன்கள் இருக்கும் நிலையில் மூன்றாவது கப்பல் 80000 டன்கள் எடையுடன் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.