இராணுவ வாகனம் விபத்து; இரு அதிகாரிகள் உயிரிழப்பு

  • Tamil Defense
  • September 12, 2020
  • Comments Off on இராணுவ வாகனம் விபத்து; இரு அதிகாரிகள் உயிரிழப்பு

ஜெய்பூரின் பிகானேர் அருகே காலை 5.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை 11ல் நடைபெற்ற வாகன விபத்தில் இரு இராணுவ அதிகாரிகள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

கலோனல் மனிஷ் சிங் சௌகான் ( இன்பான்ட்ரி பட்டாலியன் கட்டளை அதிகாரி) மற்றும் மேஜரன நீரஜ் சர்மா ஆகிய இரு அதிகாரிகளும் வீரமரணம் அடைந்துள்ளனர்.கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரனையில் சாலையில் சுற்றி திரிந்த கால்நடைகளால் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கால்நடைகளை தவிர்க்க முயன்று சாலையின் அருகே சென்று வாகனம் மோதியுள்ளது.