ஹவில்தார் அப்துல் ஹமீது அவர்களின் வீரக்கதை

  • Tamil Defense
  • September 10, 2020
  • Comments Off on ஹவில்தார் அப்துல் ஹமீது அவர்களின் வீரக்கதை

இந்திய இராணுவத்தில் மிகவும் கொண்டாடப்படும் இராணுவ வீரர்களுள் ஹவில்தார் அப்துல் ஹமீது அவர்களும் ஒருவர்.

பஞ்சாபின் அம்ரிஸ்டரில் இருந்து 60கிமீ தொலைவில் உள்ள கிராமம் தான் அசல் உத்தர்.அங்கிருந்து சில கிமீ தொலைவில் உள்ளது ஹவில்தார் அப்துல் ஹமீது அவர்களின் நினைவகம்.இராணுவத்தில் மிகவும் போற்றப்படும் வீரர்களுள் ஒருவராக திகழ்கிறார் ஹவில்தார் அப்துல் ஹமீது.

அவரது தியாகம் பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.தென் இந்திய பகுதியில் இது எந்த அளவுக்கு தெரியும் என தெரியவில்லை.கிட்டத்தட்ட 19 வருடங்கள் கடந்துவிட்டன அவர் நம்மை விட்டு பிரிந்து, ஆனால் அவரது வரலாற்றை இன்று படித்தாலும் நம் மெய் சிலிர்க்கும்.

1965 போரில் அசல் உத்தர் சண்டையில் எதிரி படைகளை துவம்சம் செய்து நாட்டிற்காக வீரமரணம் அடைந்தார்.

வாருங்கள் அவரது கட்டுக்கடங்காத தைரியம் மற்றும் அவரது ஈடுஇணையற்ற தியாத்தை காணலாம்.

ஹவில்தார் அப்துல் ஹமீது 1 ஜீலை 1933ல் உத்திர பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள தாமுபூர் கிராமத்தில் முகமது உஸ்மான் மற்றும் சகினா பேகம் தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார்.அவர்களுக்கு மேலும் இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் இருந்தனர்.

அப்துல் ஹமீது அவர்களின் அப்பா தையல்காரர்.அப்துல் அவர்கள் இராணுவத்தில் இணைவதற்கு முன் அவரது அப்பாவுக்கு உதவியாக இருந்துள்ளார்.வாரணாசியில் ஹமீது அவர்கள் இராணுவத்தில் நுழையும் போது அவருக்கு வயது 20 தான்.நசிராபாத்தில் உள்ள கிரேனாடியர் ரெஜிமென்ட் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து 1955ல் 4வது பட்டாலியன் கிரானேடியர் ரெஜிமன்டில் பணியமர்த்தப்பட்டார்.

முதலில் அவர் ரைபிள் கம்பெனியில் பணி புரிந்தாலும் பின்னாளில் ரிகாய்லெஸ் கம்பெனியில் பணி பெற்றார்.1962 சீனப் போர் வந்த போது அவர் வடகிழக்கு முன்னனி பிரிவில் உள்ள தாங்க் லா என்ற இடத்தில் 4வது மலைப்பிரிவு டிவிசனின் 7 மலைப் பிரிவு பிரிகேடின் கீழ் போரிட்டார்.

போர் முடிவுற்ற பிறகு அவரது படை அம்பாலா சென்றது.அங்கு அவர்  Company Quarter Master Havildar (CQMH) எனப் பதவி பெற்று நிர்வாக கம்பெனியில் பணியமர்த்தப்பட்டார்.

106 mm recoilless ரைபிளில் அபரமாக சுடும் திறமை பெற்றிருந்தாலும் பட்டாலியன் கமாண்டர் அவரை ரைபிள் பிளாட்டூனில் NCO-வாக பணியாற்ற விருப்பினார்.

கிட்டத்தட்ட இந்த நேரத்தில் தான் 1965 போர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வெடித்தது.இந்த நேரத்தில் அப்துல் ஹமீது அவர்கள் தனது 10 வருட இராணுவ சேவையை முடித்திருந்தார்.காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு செல்லும் சப்ளை மற்றும் தொழில்நுட்ப வழிகளை உடைக்க பாகிஸ்தான் படைகள் ஜம்முவின் அக்னூர் செக்டாரை தாக்குவதாய் தகவல் வெளியாகியது.

ஹமீது அவர்களின் 4வது கிரானேடியர் பட்டாலியன் பஞ்சாபின் கெம் கரன் செக்டாருக்கு செல்ல கூடிய சாலையில் சிமா என்ற கிராமத்திற்கு அருகே இருந்தனர்.எதிரிகள் அசல் உத்தர் என்ற கிராமத்தை அடைய அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தும் பணி ஹமீது அவர்களின் படைக்கு தரப்பட்டது.

இந்தியாவின் பாதுகாப்பு திட்டத்திற்கு அந்த பகுதியை பாதுகாப்பது மிகவும் முக்கியமாக இருந்தது.எனவே 4வது கிரானேடியர் படை முன்னாள் நகர்ந்தது.பக்கத்தில் இருந்த ordnance depot களில்  106 RCL துப்பாக்கிகளை பெற்று படை முன் சென்றது.அந்த படையில் ஹமீது அவர்கள் non-commissioned instructor ஆக இருந்தார்.அந்த பட்டாலியனில்
anti-tank detachment கமாண்டர்கள் இல்லாத காரணத்தால் அந்த பணியை ஹமீது அவர்கள் ஏற்றார்.

செப்டம்பர் 8, அன்று கிரானேடியர்கள் நிலைகள் மீது பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தியது.இந்திய படை வெற்றிகரமாக முறியடித்தது.இந்த நேரத்தில் தான் பாகிஸ்தான் தனது அதிநவீன பேட்டன் டேங்குகளுடன் முழுநீள தாக்குதல் நடத்த தயாராகி வந்தது.இந்திய படைகள் இருந்த பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர் ஷெல் தாக்குதலை நடத்தியது.
ஒரு recoilless gun detachment-க்கு தலைமை தாங்கியிருந்த ஹமது அவர்கள் துப்பாக்கி பொருத்தப்பட்டிருந்த தனது ஜீப்பின் உதவியுடன் பக்கவாட்டில் நகர்ந்து சென்றார்.

எதிரியின் டேங்குகள் கிட்டத்தட்ட அருகே வந்துவிட்டன.ஹமீது அவர்கள் தாக்க தொடங்கினார்.அவர் சுட்ட போது தனது ஒவ்வொரு ஷெல்லும் எதிரி டேங்க் மீது விழுவதை பார்த்தார்.ஒரு டேங்க் மீது ஷெல் விழுந்து டேங்க் பற்றி எரிய மற்ற இரு டேங்குகளை கைவிட்டு பாகிஸ்தானியர் ஓடுவதை பார்த்தார்.

அந்த நாள் முடிவில் ஹமீது இரு டேங்கை வீழ்த்தினார்.நான்கு டேங்குகளை பாகிஸ்தானியர் கைவிட்டு ஓடியதை கண்டார்.ஹமீது அவர்கள் இந்திய இராணுவ பொறியாளர்களை வரவழைத்து  டேங்க் எதிர்ப்பு கண்ணிகளை அகற்ற கூறினார்.

அடுத்த நாளும் தனது recoilless gun உடன் களம் கண்டார்.பாகிஸ்தானிய சேபர் போர்விமானத் தாக்குதலுக்கிடையேயும் நமது வீரர்கள் தாக்குதலை தொடர்ந்தனர்.அந்த நாள் முடிவிலும் ஹமீது அவர்கள் மேலும் இரு டேங்குகளை வீழ்த்தியிருந்தார்.

செப்டம்பர் 10, 0800 மணி. பாகிஸ்தானின் பேட்டன் டேங்க் பட்டாலியன் ஒன்று 4th Grenadier position-களை தாக்கியது.இந்திய படைகள் நேரடியாக ஆர்டில்லரி தாக்குதலுக்கு உள்ளானது.ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பாகிஸ்தானிய படைகள் முன்னனி இந்திய நிலைகளை ஊடுருவியது.நிலைமை படுபயங்கரமாக மாறியது.ஆறு பாகிஸ்தானிய பேட்டன் டேங்குகள் தனது படையை நோக்கி வருவதை ஹமீது அவர்கள் கண்டார்.சிறிதும் யோசிக்காமல் தனது துப்பாக்கி பொருத்தப்பட்ட ஜீப் மீது ஏறி அவர்களை வீழ்த்த தயாரானார்.

எதிரியின் கடும் தாக்குதால் ஹமீதை ஒன்றும் செய்யமுடியவில்லை.பெரிய பருத்தி செடி வயலின் உதவியுடன் மறைந்திருந்து டேங்க் படையை வழிநடத்தி வந்த முதல் டேங்கை துல்லியமாக அடித்து வீழ்த்தினார்.
தனது நிலையை மாற்றி மேலும் இரு டேங்குகளை வீழ்த்தினார்.
இந்த நேரத்தில் பாகிஸ்தானியர் ஹமீது அவர்களின் ஜீப்பை அடையாளம் கண்டு கொண்டனர்.
இயந்திர துப்பாக்கிகள் கொண்டு அவரை வீழ்த்த முனைந்தனர் எதிரிகள்.இதே நேரத்தில் மற்றுமொரு எதிரி டேங்கை ஹமீது அவர்கள் தாக்க ,அவரது ஜீப்பை ஒரு  high explosive shell தாக்கி அவர் படுகாயம் அடைந்தார்.பின்பு வீரமரணத்தை தழுவினார்.

இந்த தாக்குதலில் மட்டும் அப்துல் ஹமீது அவர்கள் எட்டு பாகிஸ்தானிய பேட்டன் டேங்குகளை வீழ்த்தியிருந்தார்.அவரது ஈடுஇணையற்ற வீரம் மற்றும் அவரது சகவீரர்களின் தியாகம் காரணமாக அவர்கள் எதிரியின் கொடூர தாக்குதலை எதிர்த்து நின்றனர்.இந்த தாக்குதலில் மட்டுமே பாகிஸ்தான் 97 டேங்குகளை இழந்தது.

இதற்கு மூன்று நாள் பிறகு கிடைத்த வெற்றியை காணவோ ,வீரர்களுடன் இணைந்து கொண்டாடவோ ஹமீது அவர்களால் இயலாது போயிருக்கலாம் ஆனால் அவரைப் போன்ற நூற்றுக்கணக்கான வீரர்களின் தியாகத்தால் தான் வெற்றி சாத்தியப்பட்டது.

எதிரியை கதிகலங்க வைத்து வெற்றிக்கு வித்திட்ட ஹவில்தார் அப்துல் ஹமீது அவர்களுக்கு பரம்வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.

இன்று அவர் அசல் உத்தரில் உறங்கி கொண்டிருக்கிறார்.

அவரது தியாகத்தை விசுவாத்துடன் போற்றுவோம்.அவர் வாழ்கிறார்,இந்திய மக்கள் மனதில்…என்னும் நிறைந்திருப்பார்…

வீரவணக்கம்