
ஸ்ரீநகரின் பட்மாலூ பகுதியில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.ஒரு சிஆர்பிஎப் அதிகாரி காயமடைந்துள்ளார்.
பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.தற்போது அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சிஆர்பிஎப் படையின் டெபுடி கமாண்டன்ட் இந்த என்கௌன்டரில் காயமடைந்துள்ளார்.அவர் உடனடியாக 92வது தளமருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.