மூன்று நாள் மெகா கடற்போர் பயிற்சியை தொடங்கிய இந்தியா-ஜப்பான் கடற்படைகள்

லடாக் எல்லை பகுதியில் இந்திய சீன படைகளுக்கு இடையே மோதல் போக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்திய ஜப்பான் கடற்படைகள் மூன்று நாள் கடற்போர் பயிற்சியை தொடங்கியுள்ளன.

சனியன்று வடக்கு அராபியன் கடற்பகுதியில் இந்த போர்பயிற்சி தொடங்கியது.செப்டம்பர் 9 அன்று முக்கிய இராணுவ ஒப்பந்தத்திற்கு பிறகு முதல் முறையாக இது போன்ற பயிற்சி இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

JIMEX என அழைக்கப்படும் இந்த பயிற்சி நடைபெறுவது இது நான்காவது முறை ஆகும்.இந்திய சீனப் படைகள் எல்லையில் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி 2012ல் இந்த ஜிமெக்ஸ் போர்பயிற்சி இரு நாடுகளுக்கு இடையேயான கடற்சார் உறவை வலுப்படுத்தும் பொருட்டு தொடங்கப்பட்டது.கடைசியாக அக்டோபர் 2018ல் இந்த பயிற்சி நடைபெற்றது.

இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் டர்காஷ், மற்றும் தீபக் டேங்கர் ஆகிய போர்க்கப்பல்கள் கலந்து கொண்டுள்ளன.

அதே போல ஜப்பான் சார்பில் காகா மற்றும் இகாசுசி ஆகிய கப்பல்கள் கலந்து கொண்டுள்ளன.

கப்பல்கள் தவிர நீண்ட தூர கடற்சார் ரோந்து கப்பல்களும் ,வானூர்திகளும், போர்விமானங்களும் கலந்து கொண்டுள்ளன.