எதிரிகளால் கண்டறிய முடியாத மூன்றாவது சாலை-365 நாளும் இனி லே செல்லலாம்

  • Tamil Defense
  • September 7, 2020
  • Comments Off on எதிரிகளால் கண்டறிய முடியாத மூன்றாவது சாலை-365 நாளும் இனி லே செல்லலாம்

இந்திய-சீனப் பிரச்சனை பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில் எல்லைச் சாலைகள் அமைப்பு தனது மூன்றாவது முக்கிய சாலைப் பணியை கிட்டத்தட்ட முடித்துள்ளது.நிம்மு-படாம்-டார்ச்சா சாலை என அழைக்கப்படும் இந்த மூன்றாவது சாலை வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு செல்ல பாதுகாப்பு படைகளுக்கு உதவும்.

மனாலியில் இருந்து லே செல்ல முன்பு 12-14 மணி நேரங்கள் ஆகும்.ஆனால் இந்த புது சாலையால் தற்போது ஆறு முதல் ஏழு மணி நேரத்திற்குள் லே சென்றுவிட முடியும்.

இது தவிர ஸ்ரீநகர்-கார்கில்-லே சாலை மற்றும் மனாலி சர்சு-லே என இரு சாலைகள் உள்ளது.தற்போது அமைக்கப்பட்டது மூன்றாவது இணைப்பு சாலை ஆகும்.முதல் இரு சாலைகளும் எல்லைக்கு மிக அருகே இருப்பதால் அவை எதிரியின் கண்களுக்கு அகப்பட கூடும்.இந்த மூன்றாவது சாலையை அவ்வளவு எளிதாக எதிரியால் கண்காணிக்க முடியாது.

இந்த மூன்றாவது சாலையை வருடம் முழுதும் உபயோகிக்க முடியும்.ஆனால் மற்ற இரு சாலைகளையும் ஆறு-ஏழு மாதங்களுக்கு மட்டுமே உபயோகிக்க முடியும்.

இனி இந்திய இராணுவம் இந்த சாலையை உபயோகிக்க முடியும்.பல டன்கள் எடையுடைய வாகனங்கள் கூட இந்த சாலையில் செல்ல முடியும்.