ஸ்குவாட்ரான் லீடர் அஜ்ஜமடா போப்பய்யா தேவய்யா

1965 இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்றுகொண்டிருந்த சமயம்.நமது விமானப்படைக்கு சோதனை காலம் தான்.நமது விமானப்படைக்கு இழப்பு அதிகம்.அதற்கு காரணமும் உள்ளது.ஏனெனில் அந்த நேரத்தில் இந்தியா இயக்கிய விமானங்களை விட பாகிஸ்தான் நவீன விமானங்களை இயக்கியது.பாகிஸ்தான் எப்-104 விமானம் இந்த பிராந்தியத்தின் முதல் சூப்பர்சோனிக் விமானமாக இருந்தது.1954 முதல் 1964 வரை நிதி உதவிகள் என்ற பெயரில் பாகிஸ்தான் 1.5பில்லியன் டாலர்கள் வரை பெற்று தனது இராணுவத்தை வலிமைப்படுத்தியிருந்தது.இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகை.அதே நேரத்தில் இந்திய தலைவர்கள் இந்திய இராணுவத்தை சீரமைத்து நவீனப்படுத்துதலில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.அந்த காலத்தில் இந்திய விமானப்படையின் மூன்றில் ஒரு பங்கு விமானம் இரண்டாம் உலகப் போர் காலத்திலானது.460 புதிய எம்-47 மற்றும் எம்-48 டேங்குகள்,கடற்படைக்கு கண்ணிவாரிகப்பல்கள்,நாசகாரிகப்பல்கள்,நீர்மூழ்கிகள் மற்றும் விமானப்படைக்கு 120 எப்-86 சேபர் விமானங்கள் மற்றும் புதிய சூப்பர்சோனிக் எப்-104 விமானங்கள் மற்றும் இந்த விமானங்களில் புதிய வான்-வான் தாக்கும் சைடுவின்டர் ஏவுகணைளும் இணைக்கப்பட்டிருந்தன.தென்னாசியாவில் பாகிஸ்தான் தான் இவற்றை முதல் முறையாக பெற்றிருந்தது.

இந்தியா அதிக அளவில் விமானங்கள் இழந்திருந்தது.காரணம் தளத்தில் இருந்த விமானங்கள் பாகிஸ்தானால் தாக்கப்பட்டதே.ஆனால் நேருக்கு நேரான வான் சண்டையில் இந்தியா 14 மட்டுமே இழந்திருந்தது.பாகிஸ்தான் 18 விமானங்களை இழந்திருந்தது.

தேவய்யா டிசம்பர் 24 , 1932ல் கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தில் பிறந்தார்.1954ல் விமானப்படையில் இணைந்த அவர் 1965 போர் தொடங்கி நேரத்தில் விமானப்படை கல்லூரியில் பயிற்சியாளராக இருந்தார்.பின்பு டைகர் ஸ்குவாட்ரானில் மாறுதல் பெற்று போரின் போது மிஸ்டியர் விமானத்தில் பறந்தார்.

இந்நிலையில் தான் பாகிஸ்தானின் சர்கோதா தளத்தை தாக்க விமானப்படை தனது விமானங்களை அனுப்பியது.7 செப் 1965 க்கு விமானங்கள் பறந்தன.

தாக்குதலுக்கு சென்ற மற்ற விமானங்கள் தாக்குதல் முடித்து இந்தியாவிற்கு திரும்பின ஒரு விமானம் தவிர.அது ஸ்குவாட்ரான் லீடர் தேவய்யா அவர்களின் மிஸ்டியர் விமானம் மட்டும் திரும்பவில்லை.அவருக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.அரசு அவரை போரில் காணாமல் போனதாக அறிவித்தது.

அதன் பின் பலகாலத்திற்கு பின் தான் என்ன ஆனது என்பது தெரியவந்தது.

தளம் தாக்குதலில் ஈடுபட்டு வெற்றிகரமாக திரும்பும் போது தேவய்யா அவர்களின் விமானத்தை பாகிஸ்தான் எப்-104 விமானம் வழிமறித்தது.எப்-104 விமானம் சூப்பர்சோனிக் விமானம் ஆனால் நமது மிஸ்டியர் ட்ரைசோனிக் விமானம்.மிஸ்டியரை விட எப்-104 விமானம் வேகமாக பறக்க கூடியது.

வானில் நடைபெற்ற சண்டையில் எப்-104 விமானம் மிஸ்டியரை நோக்கி ஒரு சைடுவின்டர் ஏவுகணையை ஏவியது.மிஸ்டியர் அதில் இருந்து  வெற்றிகரமாக நழுவிச் சென்றது.ஆனால் எப்-104 விமானத்தின் வேகம் காரணமாக அது மிஸ்டியர் விமானத்தின் அருகே வந்து தனது 20மிமீ துப்பாக்கியால் தாக்கியது.இதில் மிஸ்டியர் விமானம் சேதமடைந்தது.ஆனால் அதே நேரத்தில் வேகம் காரணமாக எப்-104 விமானம் மிஸ்டியர் விமானத்திற்கு முன்னதாக சென்றுவிட்டது.சேதமடைந்த விமானமாயினும் தனது முயற்சியால் விமானத்தை செலுத்தி முன்னால் சென்ற எப்-104 விமானத்தில் மோதியதாகவும் அல்லது சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல் கூறுகிறது.ஆனால் அவர் எப்-104விமானத்தை வீழ்த்திவிட்டார்.

எப்-104 விமானி தனது பாராசூட் வழியே தப்பித்தார்.ஆனால் தேவய்யா அவர்களின் விமானம் தரையில் மோதி வெடித்து அவர் வீரமரணம் அடைந்தார்.அவரின் உடலை பாகிஸ்தான் கிராம மக்கள் சர்கோதா தளத்தின் அருகே புதைத்ததாக 1979க்கு பின் தகவல் பாகிஸ்தானால் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு 1988ல் விமானப்படைக்கு நடந்த உண்மை தெரிந்து அவரின் தியாகம் மற்றும் வீரத்தை கௌரவிக்கும் பொருட்டு மகாவீர் சக்ரா விருது வழங்கியது.23 வருடங்களுக்கு பிறகு அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

வீரவணக்கம்