ஆகஸ்டு 29க்கு பிறகு ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேறுங்கள்-இந்தியாவை சீனா வலியுறுத்தல்

  • Tamil Defense
  • September 22, 2020
  • Comments Off on ஆகஸ்டு 29க்கு பிறகு ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேறுங்கள்-இந்தியாவை சீனா வலியுறுத்தல்

ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது தெற்கு பங்கோங் ஏரி பகுதியில் ஆகஸ்டு 29க்கு பிறகு இந்திய இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேற சீன இராணுவம் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.

திங்கள் அன்று இந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.இரு நாடுகள் போரை தவிர்க்க பல கட்டங்களாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதே நேரம் இந்தியா ஏப்ரல்-மே மாதங்களுக்கு முன்பிருந்த நிலைகளுக்கு சீன இராணுவம் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.இவற்றை விரைந்து சீனா செயல்படுத்த வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.

மேலதிக மோதலை தவிர்க்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் இரு நாடுகளும் தொலைத்தொடர்பில் இணைந்து இருக்கவும் முடிவு செய்துள்ளன.

ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை சீனப்பகுதியான மோல்டோவில் நடைபெற்றது.
இந்திய குழுவிற்கு லே-வில் உள்ள 14வது கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் ஹரிந்தர் சிங் அவர்கள் தலைமையேற்றார்.

அதே போல் முதல் முறையாக இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து ஒரு மூத்த அதிகாரியும் கலந்து கொண்டார்.வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலர் நவீன ஸ்ரீவத்சவா அவர்கள் கலந்து கொண்டார்.