
இந்திய சீன எல்லைக் கோடு முழுதும் நிலைமை சிறிது பதற்றமாகவே உள்ளது என லடாக் விசிட்டின் போது இராணுவ தளபதி கூறியுள்ளார்.நிலைமையை உணர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
நமது சுய பாதுகாப்புக்காம நமது படைகளை எல்லையில் நிறுத்தியுள்ளோம்.எனவே நமது பாதுகாப்பும் ஒருங்கிணைப்பும் உறுதி செய்யப்படும் என தளபதி கூறியுள்ளார்.
கடந்த 2-3 மாதங்களாக நிலைமை பதற்றத்துடன் தான் உள்ளது.ஆனால் டிப்ளோமேட்டிக் மற்றும் இராணுவம் வழியாக தொடர்ந்து சீனாவுடன் பேசி வருகிறோம்.இது எதிர்காலத்திலும் தொடரும் என அவர் கூறியுள்ளார்.
இது போன்ற பேச்சுவார்த்தைகள் மூலம் சீனாவுடனான வேறுபாடுகள் களையப்படும் என அவர் கூறியுள்ளார்.