
இந்தியா எல்லையில் ஆக்சனை விரும்பினால் 1962 போரை விட இந்தியாவிற்கு அதிக இராணுவ சேதத்தை சீனா விளைவிக்கும் என சீன நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் 90% சீனர்கள் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கூறுவதாக குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.தேவைப்படும் போது சீனா கண்டிப்பாக ஆக்சன் எடுக்க வேண்டும் எனவும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவை விட பலமடங்கு சக்தி கொண்டது சீனா.இந்தியா சீனாவிற்கு இணையான எதிரி கிடையாது என குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.