எங்கள் எல்லைக்குள் நுழைந்து சுட்ட இந்திய இராணுவம்-சீனா குற்றச்சாட்டு

  • Tamil Defense
  • September 8, 2020
  • Comments Off on எங்கள் எல்லைக்குள் நுழைந்து சுட்ட இந்திய இராணுவம்-சீனா குற்றச்சாட்டு

இந்திய இராணுவம் சீனப்பகுதிக்குள் நுழைந்து சீன வீரர்களை எச்சரிக்கும் வண்ணம் வானில் துப்பாக்கியால் சுட்டதாக சீன இராணுவம் கதறி வருகிறது.

சீன எல்லைப் படை வீரர்கள் நிலையை சீரமைக்க “எதிர்நடவடிக்கைகள்” எடுத்ததாக சீனா கூறியுள்ளது.ஆனால் எதுபோன்ற எதிர்நடவடிக்கைகள் என சீனா தெளிவாக எதும் கூறவில்லை.நமக்கு கிடைத்த தகவல்படி சீனப் படைகளும் வானை நோக்கி சுட்டிருக்க வாய்ப்புள்ளது.

இது வரை நிலைமையின் தீவிரம் உணர்ந்து இரு நாட்டு படைகளும் துப்பாக்கியை உபயோகிக்கவில்லை.ஆனால் தற்போது இது நடந்துள்ளது.இது நிலைமையின் தீவிரத்தை குறிக்கிறது.

இந்திய இராணுவம் இது போன்ற ஆபத்தான நடவடிக்கைகள் எடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா கூறியுள்ளது.இனிமேல் இது போல நடக்காத வண்ணம் துப்பாக்கியால் சுட்டவர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனா கூறியுள்ளது.