லடாக்கில் ரபேல் விமானம்; தயாராகும் விமானப்படை

இந்தியா சீன எல்லைப் பிரச்சனை நடந்து வரும் வேளையில் லடாக்கில் ரோந்து பணிகளை தொடங்கி உள்ளது ரபேல் விமானங்கள்.

கடந்த செப் 10 அன்று ஐந்து ரபேல் விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன.லடாக் சூழ்நிலையை புரிந்து விமானத்தை இயக்கும் பயிற்சி என்பதன் கீழ் அம்பாலா தளத்தில் இருந்து ரபேல் விமானங்கள் லடாக் வரை பறந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

படையில் இணைக்கப்பட்ட பத்தே நாட்களில் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன ரபலே் விமானங்கள்.ரபேல் விமானங்கள் படையில் இணைய இதை விட சரியான நேரம் இருக்க முடியாது என விமானப்படை தளபதி அவர்களும் கூறியுள்ளார்.

தற்போது விமானப்படை தனது அனைத்து முன்னனி போர்விமானங்களையும் லடாக்கில் நிலைநிறுத்தியுள்ளது.