
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீது கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியை தனது ஐந்தாவது மாகாணமாக பாக் அறிவிக்க உள்ளது.மேலும் வரும் நவம்பரில் அங்கு தேர்தலும் நடத்த உள்ளதாக பாக் பெடரல் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிக்கு பாக் பிரதமர் இம்ரான் கான் விரைவில் பயணம் செல்ல உள்ளதாகவும் இந்த பயணத்தின் போது ஐந்தாவது மாகாண அறிவிப்பை அவர் அறிவிப்பார் என பாக் அமைச்சர் அலி அமின் கூறியுள்ளார்.
மொத்த காஷ்மீர்,லடாக் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் ஆகியவை இந்தியாவிற்கு தான் சொந்தம் என இந்தியா கடுமையான கூறி வருகிறது.இந்த ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பாக் வெளியேற வேண்டும் என இந்தியா ஏற்கனவே கூறியிருந்தது.