ரபேலால் பீதி அடைந்த பாக்,சீனாவிடம் ஜே-10 விமான வாங்க திட்டம்
இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் இணைந்த பிறகு பாக் உண்மையாகவே பதற்றத்தில் உள்ளது.இதனை எதிர்கொள்ள பாக் சீனாவிடம் இருந்து 30 J-10CE மற்றும் நவீன வான்-வான் ஏவுகணைகளை வழங்க கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2009லிலேயே பாக் ஜே-10 விமானங்களை பெற இருந்தது.ஆனால் அதை விட விலைகுறைந்ததாக இருந்தமையால் அவர்கள் JF-17 விமானங்களை படையில் இணைந்தனர்.ஆனால் தற்போது ரபேல் பயம் காரணமாக J-10CE விமானங்கள் தவிர PL-10 மற்றும் PL-15 ஏவுகணைகளையும் வழங்க கேட்டுள்ளனர்.
அமெரிக்கா இந்தியா பக்கம் நெருங்கி வரும் வேளையில் தற்போது சீனா தான் பாக்கின் ஒரே ஆயுத சப்ளையராக உள்ளது.
ரபேல் மட்டுமல்ல அதோடு வருகின்ற அதிநவீன ஏவுகணைகளான மீட்டியர் மற்றும் மைக்கா போன்றவையும் பாக்கை பீதி கொள்ளச் செய்துள்ளது.தவிர விரைவில் எஸ்-400 வான் பாதுகாப்பு வர உள்ளதால் பீதி அதிகமாகவே ஆகி உள்ளது.