Breaking News

வாழ்நாள் முடியும் தருவாயில் செடக்/சீட்டா வானூர்திகள்-எச்சரிக்கை செய்யும் பாதுகாப்பு படைகள்

  • Tamil Defense
  • September 29, 2020
  • Comments Off on வாழ்நாள் முடியும் தருவாயில் செடக்/சீட்டா வானூர்திகள்-எச்சரிக்கை செய்யும் பாதுகாப்பு படைகள்

இந்திய பாதுகாப்பு படைகளில் தற்போது செயல்பாட்டில் உள்ள சீட்டா மற்றும் செடக் வானூர்திகளின் மொத்த தொழில்நுட்ப கால அளவு வரும் 2023 முதல் முடிய உள்ளதாக பாதுகாப்பு படைகள் எச்சரிக்கை செய்துள்ளன.

இதன் காரணமாக பல நாட்களாக நிலைவையில் உள்ள இலகுரக யுடிலிடி வானூர்திகளை வாங்கும் திட்டத்தை வேகப்படுத்த அரசை கேட்டுள்ளன படைகள்.மேலும் ஹால் நிறுவனம் மேம்படுத்தி வரும் வானூர்தியையும் விரைவாக குறிப்பிட்ட கால அளவுக்குள் வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்த செடக்/சீட்டா வானூர்திகள் கடந்த நாற்பது வருடங்களாக படைகளில் செயல்பாட்டில் உள்ளன.

கடந்த 15 வருடங்களாக புதிய வானூர்திகளுக்கான தேவையை பாதுகாப்பு படைகள் வெளியிட்ட போதிலும் இன்னும் வாங்கப்படாமல் உள்ளன.தற்போது எல்லையில் மோதல் போக்கு நிலவுவதால் மீண்டும் இந்த வானூர்திகளுக்கான தேவை உணரப்பட்டுள்ளது.

விமானப்படை மற்றும் கடற்படையில் தற்போது 187 செடக் மற்றும் 205 சீட்டா வானூர்திகள் உள்ளன.சியாச்சினில் உள்ள முன்னனி தளங்களுக்கு சப்ளைகள் கொண்டு செல்ல இந்த வானூர்திகள் தான் உதவுகின்றன.

தற்போது முப்படைக்கும் சேர்த்து 483 புதிய இலகுரக யுடிலிடி வானூர்திகள் தேவையாக உள்ளது.