அணுசக்தி விஞ்ஞானியும் முன்னாள் அடாமிக் எனர்ஜி கமிசனின் தலைவரும் ஆன டாக்டர் சேகர் பாசு கொரானா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார்.சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையும் இருந்தும் வந்துள்ளது.அவருக்கு வயது 68ஆகும்.
கடந்த 2002ல் நியூக்ளியர் சொசைட்டி விருது பெற்றவர்.2014ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார்.இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கியான அரிகந்தின் ரியாக்டன் மேம்பாட்டிற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
தாராப்பூர் மற்றும் கல்பாக்கத்தில் உள்ள நியூக்ளியர் மறுசுழற்சி பிளான்டுகளை வடிவமைத்து வடிவமைந்து,கட்டி செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததில் முக்கியமானவர் ஆவார்.
டாக்டர் சேகர் அவர்களின் மரணத்திற்கு பிரதமர்,குடியரசு தலைவர் மற்றும் மேற்குவங்க முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பாபா அடாமிக் அடாமிக் ரிசர்ச் சென்டரின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.