சீன எல்லையில் நிர்பயா ஏவுகணை

சீனா எல்லையில் குவித்துள்ள ஏவுகணை படைகளுக்கு எதிராக இந்தியா தனது நிர்பயா சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை எல்லைக்கு நகர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தரையில் ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்க வல்ல இந்த ஏவுகணை 1000கிமீ தூரம் வரை சென்று தாக்க வல்லது.தரையை ஒட்டிச் சென்று இலக்கை தாக்கும் திறன் பெற்றுள்ளது இந்த ஏவுகணை.

டிஆர்டிஓ நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு கடந்த 7 வருடங்களாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.நிர்பயா ஏவுகணை களத்தில் இறக்கப்படுவது இதுவே முதல் முறை.

தற்போது மிகக் குறைந்த அளவிலேயே இந்த ஏவுகணை களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

சீனாவும் திபத் முனையில் புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை தளங்களை கட்டியுள்ளது.இது தவிர சிக்கிம்,அருணாச்சல்,உத்ரகண்ட் ஆகிய இடங்களிலும் ஏவுகணை தளங்களை கட்டியுள்ளது சீனா.

ஏவுகணைகள் தவிர இந்தியா டேங்க் மற்றும் கவச வாகனங்களை லடாக் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.வர உள்ள குளிர்காலத்தை எதிர்கொள்ள அனைத்து விதங்களிலும் தயாராக உள்ளது.

தேவைப்படும் எனில் சில நிமிடங்களிலேயே இந்த கவச வாகனப்படைகள் எல்லைக் கோட்டை தாண்டும் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.