லே யில் உள்ள 14வது கார்ப்ஸின் கமாண்டராக இருப்பவர் லெப் ஜென் ஹரிந்தர் சிங் ஆவார்.தற்போது அவரை மாற்றி புதிதாக லெப் ஜென் மேனோன் அவர்கள் நியமிக்கப்பட உள்ளார்.மேலும் ஹரிந்தர் சிங் அவர்கள் டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகடமியில் கமாண்டன்டாக பணிமாற்றம் பெறுகிறார்.
இரு நாடுகளுக்கும் கடந்த ஐந்து மாதங்களாக எல்லைப்பிரச்சனையை தீர்க்க 6 முறை சந்தித்து பேசியுள்ளன.
புது கமாண்டர் சீனாவை எதிர்கொள்வதில் சிறந்தவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
செப்டம்பர் 21க்கு பிறகான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் மேலதிக துருப்புகளை எல்லைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை எடுத்தன.
மேலும் ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையும் பேச இரு பக்கமும் ஒப்புக்கொள்ளப்பட்டன.