லிபுலேக்கில் இந்திய இராணுவத்தின் நடமாட்டத்தை கவனிக்க நேபாள படைகளுக்கு உத்தரவு
1 min read

லிபுலேக்கில் இந்திய இராணுவத்தின் நடமாட்டத்தை கவனிக்க நேபாள படைகளுக்கு உத்தரவு

லிபுலேக்கில் பகுதியில் இந்திய இராணுவத்தின் நடமாட்டத்தை கவனிக்க நேபாள படைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அந்நாட்டு அரசு.

உத்ரகண்டின் கலபேனி பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா-நேபாளம் என மூன்று நாடுகளின் எல்லை சந்திக்கும் இடத்தை ஒட்டியுள்ள பகுதி தான் லிபுலேக்.இந்த லிபுலேக் பகுதியில் இந்திய இராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க நேபாள இராணுவ படைகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேபாள இராணுவத்தின் 44வது பட்டாலியன் தற்போது லிபுலேக்கை கண்காணிக்க நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவும் லிபுலேக் பகுதியில் தனது படைப்பலத்தை அதிகரித்துள்ளது.தற்போது 3000சீனவீரர்கள் வரை அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதே லிபுலேக் பகுதியில் இந்தியா சாலை கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தான் இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.