எல்லை நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆய்வு

  • Tamil Defense
  • September 1, 2020
  • Comments Off on எல்லை நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆய்வு

இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.ஆக 29/30 ல் சீனப்படைகள் தெற்கு பங்கோங் ஏரி பகுதியில் நுழைய முயன்றனர்.அதை வெற்றிகரமாக தடுத்த இந்திய இராணுவ வீரர்கள் தெற்கு பகுதியில் உள்ள முக்கியமாக மலைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.

தற்போது எல்லையில் நிலைமை படுமோசமாக சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் எல்லை நிலைை குறித்து கேட்டறிந்துள்ளார்.

தற்போது எல்லைப் பிரச்சனை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் அவர்களும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.