
அகமதாபாத்தில் உள்ள ஆர்மர்டு கார்ப்ஸ் மையத்தில் உள்ள கேகே சோதனை தளத்தில் இருந்து லேசர் வழிகாட்டு டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை அர்ஜீன் டேங்கில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் 3கிமீ தூரத்தில் உள்ள இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கியது.
Explosive Reactive Armour (ERA) கொண்டு பாதுகாக்கப்படும் கவச வாகனங்களை தாக்கியழிக்க இந்த ஏவுகணை உபயோகப்படும்.இந்த ஏவுகணையை பல பிளாட்பார்களில் வைத்து ஏவ முடியும்.
புனேவில் உள்ள ARDE மற்றும் HEMRL மற்றும் டேராடூனில் உள்ள IRDE ஆகியவை இணைந்து இந்த ஏவுகணையை மேம்படுத்தியுள்ளன.