பின் நகருங்கள்- இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா

  • Tamil Defense
  • September 1, 2020
  • Comments Off on பின் நகருங்கள்- இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா

ஆக 29/30 இரவு சீனப்படைகள் பங்கோங்கின் தெற்கு பகுதியில் ஊடுருவ முயன்றனர்.இதை தடுத்த இந்திய வீரர்கள் அந்த பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களை கைப்பற்றினர்.

தற்போது இந்திய வீரர்கள் இந்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வீரர்கள் சட்டவிரோதாக சீனப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் எனவும் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும் சீன இராணுவத்தின் மேற்கு தியேட்டர் கமாண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதற்றத்தை குறைக்க பிரிகேடியர் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை சூசுல் பகுதியில் நடைபெற்றாலும் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தெரிகிறது.

சீனா மேலும் எந்த ஊடுருவல் நடத்தினாலும் அதை தடுக்க இந்திய வீரர்கள் பெரும் அளவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.