
சீனாவுடனான எல்லைக் கோடு பகுதியில் உள்ள வீரர்களுக்கு புதிய நவீன ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீரர்களுக்கு சிக் சார் 716 துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளது.முதல் தொகுதி 66400 துப்பாக்கிகளுக்கு பிறகு தற்போது 73000 துப்பாக்கிகள் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த இரண்டாம் தொகுதி ஆயுதங்கள் பெற அனுமதி அடுத்த வாரம் நடைபெற உள்ள பாதுகாப்பு தளவாட கொள்முதல் கூட்டத்தில் கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டு பெறப்பட்டு வருவதால் இரண்டாம் தொகுதி ஆயுதங்கள் கிடைக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாது.
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து கேரக்கால் கார்பைன் துப்பாக்கி வாங்கும் திட்டமும் கிடப்பில் உள்ளது.