இந்திய-இரஷ்ய கடற்படைகள் வங்காள விரிகுடாவில் போர்பயிற்சி

  • Tamil Defense
  • September 6, 2020
  • Comments Off on இந்திய-இரஷ்ய கடற்படைகள் வங்காள விரிகுடாவில் போர்பயிற்சி

இந்திய இரஷ்ய கடற்படைகள் இரண்டாம் நாளாக வங்காள விரிகுடா பகுதியில் போர்பயிற்சி நடத்தி வருகின்றன.இந்திய-சீன பிரச்சனையால் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படை கண்காணிப்பை அதிகப்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த போர்பயிற்சி நடைபெற்று வருகிறது.

கடற்பரப்பு எதிர்ப்பு போர்முறை,விமான எதிர்ப்பு போர்முறை ,உலங்கு வானூர்தி ஆபரேசன் ஆகியவை இந்திர நேவி போர் பயிற்சியின் கீழ் நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சியில் ரஷ்ய கடற்படையின் அட்மிரல் வினோகிரதோவ் மற்றும் அட்மிரல் ட்ரிபுட்ஸ் ஆகிய டெஸ்ட்ராயர் கப்பல்களும் , ஃபீளிட் டேங்கர் போரிஸ் புடோமா ஆகியவை கலந்து கொண்டுள்ளன.