இந்திய வானூர்திகள் குளிர்கால ஆபரேசன்களுக்கு தயார்- ஹால் நிறுவன தலைவர்

  • Tamil Defense
  • September 24, 2020
  • Comments Off on இந்திய வானூர்திகள் குளிர்கால ஆபரேசன்களுக்கு தயார்- ஹால் நிறுவன தலைவர்

லடாக்கில் முன்னனி நிலைகளில் உள்ள வீரர்களுக்கு குளிர்காலம் முழுவதும் சப்ளைகள் செய்ய இந்திய தயாரிப்பு வானூர்திகள் தயாராக உள்ளதாக ஹால் சீப் தெரிவித்துள்ளார்.இது தவிர புதிய இரு ரக வானூர்திகளும் உயர்குளிர் மலைப் பகுதிகளில் தனது திறனை நிரூபித்துள்ளன.

சியாச்சினில் பணிபுரியும் வீர்ர்களுக்கு சப்ளைகள் செய்ய தற்போது ஹால் ALH பயன்படுத்தப்பட்டு வருகிறது.விமானப்படை மற்றும் இராணுவம் என இரு படைகளும் இந்த வானூர்தியை உபயோகித்து வருகின்றன.மேலும் தற்போது லடாக்கில் பனிக்காலம் தொடங்க உள்ளதால் சாலைகள் அனைத்தும் மூடப்படும்.இந்நிலையில் முன்னனி வீரர்களுக்கு சப்ளைகள் செய்ய வானூர்திகள் உபயோகப்படுத்தப்படும்.மேலும் இந்த பணியை நமது வானூர்திகள் சிறப்பாக செய்யும் என ஹால் சேர்மேன் மாதவன் கூறியுள்ளார்.தற்போது 20 வானூர்திகள் செயல்பட்டு வருவதாகவும் இதற்கு சப்போர்ட் குழுவும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ALH தவிர இரு இலகுரக தாக்கும் வானூர்திகளையும் ஹால் நிறுவனம் வழங்கியுள்ளது.மேற்கொண்டு வானூர்திகள் ஆர்டர் செய்யப்படவில்லை எனினும் இரு வானூர்திகளும் சிறப்பாக செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் ஹால் நிறுவனம் மேம்படுத்தியுள்ள லைட் யுடிலிடி உலங்கு வானூர்தியும் தற்போது லடாக்கில் சோதனையில் உள்ளது.இவை பயன்பாட்டுக்கும் வரும் பட்சத்தில் பழைய சீட்டா வானூர்திகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும்.