சுடக்கூடிய தொலைவில் இரு நாட்டு இராணுவங்கள்

  • Tamil Defense
  • September 1, 2020
  • Comments Off on சுடக்கூடிய தொலைவில் இரு நாட்டு இராணுவங்கள்

இந்திய படைகள் கைப்பற்றி உள்ள காலா டாப் பகுதிக்கு மிக அருகிலேயே சீன போர் டேங்குகள் மற்றும் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுட்டுவிடக்கூடிய தொலைவுக்கு மிக அருகிலேயே இரு நாட்டு இராணுவங்கள் உள்ளன.சீனா இலகு மற்றும் கனரக டேங்குகளை அங்கு நிறுத்தியுள்ளது.

காலா டாப் மீதுள்ள இந்திய படைகளும் முழு ஆயுதம் தரித்து உள்ளனர்.இவர்களுக்கு ஆதரவாக டேங்க் படைப்பிரிவுகளும் ஆர்டில்லரி பிரிவுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த காலா டாப் மற்றும் பக்கத்தில் உள்ள உயர் மலைப் பகுதிகளை இந்திய இராணுவம் மற்றும் சிறப்பு முன்னனி படைப் பிரிவுகள் கைப்பற்றியுள்ளதால் சீன படைகளின் முன்னேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பிரைகேடு கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை மோல்டாே எனும் பகுதியில் நடைபெற்று வருகிறது.