பங்கோங் ஏரியின் தெற்கு பகுதிகளில் இந்திய எல்லையை ஒட்டிய முக்கிய உயர் பகுதிகளில் இந்திய இராணுவம் தனது இருப்பை வலுப்படுத்தியதை அடுத்து வடக்கு பகுதியிலும் பிங்கர் நான்கின் ரிட்ஜ்லைன் பகுதிகளில் தனது இருப்பு நிலையை வலுப்படுத்தியுள்ளது இந்திய இராணுவம்.
கிட்டத்தட்ட இதே ரிட்ஜ்லைன் அருகே சீனப்படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.ஆனால் பிங்கர் நான்கு பகுதியை இந்தியப்படைகள் கைப்பற்றியுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.பங்கோங் ஏரியின் வடக்கு பகுதியில் முன்னெச்சரிக்கையாக இந்திய படைகள் தங்கள் இருப்பு நிலைகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்துள்ளன.
சீனப்படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதை அடுத்து பல்வேறு நடவடிக்கைகளை இந்திய இராணுவம் எடுத்து வருகிறது.
நாம் அவர்கள் எல்லைக்குள் நுழையவில்லை.மாறாக தெற்கு பகுதியில் நமது இருப்பை வலுப்படுத்தியுள்ளோம்.