லடாக்கில் குளிர்காலத்தை எதிர்கொள்ள தயாராகும் இந்திய இராணுவம்-சப்ளைகள் எல்லைக்கு அனுப்பி வைப்பு

  • Tamil Defense
  • September 17, 2020
  • Comments Off on லடாக்கில் குளிர்காலத்தை எதிர்கொள்ள தயாராகும் இந்திய இராணுவம்-சப்ளைகள் எல்லைக்கு அனுப்பி வைப்பு

இந்திய சீன எல்லையில் பதற்றம் தொடர்ந்து வருகிறது.இது எந்த நிலையிலும் சண்டையாக மாற அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.இந்நிலையில் குளிர்காலம் தொடங்க உள்ளதால் முன்னனி பகுதிகளில் உள்ள வீரர்களுக்கு தொடர்ந்து ரேசன் உள்ளிட்ட சப்ளைகள் வழங்கப்பட வேண்டும்.இதற்காக மூல் எனப்படும் கழுதைகள் முதல் பெரிய அளவிலான சி-17 விமானங்கள் வரை அனைத்தின் உதவியுடனும் சப்ளைகள் தொடர்ந்து லடாக் எல்லைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

வெடிபொருள்கள்,தளவாடங்கள்,எரிபொருள், குளிர்கால சப்ளைகள்,உணவு பொருள்கள் ஆகியவை லடாக் முனைக்கு வேகமாக அனுப்பப்பட்டு வருகின்றன.

மே மாதம் தொடங்கிய இந்த மோதல் தற்போது வரை நீடித்து வருகிறது.1962க்கு பிறகு எப்போதும் இல்லாமல் இந்த அளவுக்கு இந்த பிரச்சனை பெரிதாகி உள்ளது.

பிரச்சனையை தீர்க்க இரு நாடுகளும் பல்வேறு வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன எனினும் எதிலும் முடிவு எட்டப்படவில்லை.இரு நாட்டு வீரர்களும் எல்லையில் சில பகுதியில் 700மீ இடைவெளியில் உள்ளனர்.

கிழக்கு லடாக் பகுதியில் 20000-30000 வீரர்கள் வரை உள்ளனர் என கூறப்படுகிறது எனினும் இதைவிட இருமடங்கு வீரர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறுமுனையில் சீன படைகள் அதிகரித்தும் வரும் வேளையில் அதே போலவே நமது பகுதியிலும் துருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.