30 உயர் மலைப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம்
1 min read

30 உயர் மலைப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம்

பங்கோங் ஏரியின் தெற்கு பகுதியில் இந்திய இராணுவம் 30 மலைப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.இந்த மலைப்பகுதிகளில் சில இதற்கு முன் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை அல்லது சில இந்திய இராணுவத்தின் பாதி கட்டுப்பாட்டிலும் இருந்தவை ஆகும்.

கிழக்கு லடாக்கின் பங்கோங் ஏரியின் தெற்கு பகுதியில் சீனப்படைகள் ஊடுருவ முயன்றதை அடுத்து இந்திய படைகள் அவர்களை தடுத்து நிறுத்தியது.மேலும் அருகாமையில் உள்ள முக்கிய மலைப்பகுதிகளையும் ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது.

பிளாக் டாப்,ஹனான்,ஹெல்மெட்,குருங் ஹில்,கோர்கா ஹில் மற்றும் மகர் ஹில் மற்றும் பல மலைப் பகுதிகளும் அடங்கும்.ரெகின் லா மலைப் பகுதியை கட்டுப்படுத்தியதன் மூலம் ஸ்பங்குர் கேப் பகுதியில் முழு ஆதிக்கம் செலுத்த முடியும்.இந்த பகுதிகள் இதற்கு முன் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை.சில பகுதிகளை மட்டும் இந்திய இராணுவம் பாதி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.