எல்லை நிலவரம் குறித்து அறிய அவசரமாக லடாக் செல்லும் தளபதி நரவனே

  • Tamil Defense
  • September 3, 2020
  • Comments Off on எல்லை நிலவரம் குறித்து அறிய அவசரமாக லடாக் செல்லும் தளபதி நரவனே

தற்போது எல்லையில் நடைபெற்று வரும் பிரச்சனையில் மோதல் முற்றி வரும் நிலையில் தற்போது இராணுவ தளபதி நரவனே அவசரமாக லடாக் விரைந்துள்ளார்.

அவரது இரு நாள் பயணத்தின் போது கள கமாண்டர்கள் படைகளின் தயார் நிலை குறித்து இராணுவ தளபதிக்கு விளக்கம் அளிப்பர்.

இந்திய எல்லைக்குள் சீனப்படைகள் நுழைய முற்பட்டதை அடுத்து இந்திய படைகள் அதை தடுத்து நிறுத்தினர்.அதன் பிறகு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தனத இருப்பை சில மலைப்பகுதிகளில் இந்திய இராணுவம் வலுப்படுத்தியுள்ளது.

தற்போது எல்லை நிலவரம் என்ன என்று கேட்டால் எந்த நேரத்திலும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்க அனைத்து சாத்தியக்கூறுகளும்உள்ளன.

இந்நிலையில் தான் இராணுவ தளபதியின் எல்லைப் பயணம் அமைந்து உள்ளது.இரு நாட்கள் அவர் லடாக்கில் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்வார்.

இந்தியா திரும்ப கைப்பற்றியதாக கூறப்படும் இரு முக்கிய மலைப்பகுதிகள் 1962 போரில் இந்தியாவிடம் இருந்து சீனா கைப்பற்றிய பகுதிகள் என கூறப்படுகிறது.

தற்போது எல்லையில் வெறும் பத்து கிமீ இடைவெளியில் இரு நாட்டு கவச இராணுவ படைகளும் எதிரெதிரே நின்று கொண்டிருக்கின்றன.