ப்ளாக் டாப் மலையை கைப்பற்றிய இந்திய இராணுவம்

சீனாவுடனான எல்லைப் பிரச்சனை பெரிதாகி வரும் நிலையில் நேபாளம் மற்றும் பூடான் உடனான இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது இந்திய இராணுவம்.

எல்லைப் பகுதிகளை காவல் காக்கும் படைப் பிரிவுகள் உட்சபட்ச தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையிலும் சீனப்படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.இதை வெற்றிகரமாக இந்திய படைகள் தடுத்து நிறுத்தியுள்ளன.

மேலும் தெற்கு பங்கோங் பகுதியில் ப்ளாக் டாப் உள்ளிட்டு முக்கிய உயர்மலைப் பகுதிகளை இந்திய இராணுவம் கைப்பற்றியுள்ளது.