20 நொடிகளில் 30கிமீ தூரம்…ஹைப்பர் சோனிக் தொழில்நுட்ப செயல்பாடு வாகனம் சோதனை

  • Tamil Defense
  • September 7, 2020
  • Comments Off on 20 நொடிகளில் 30கிமீ தூரம்…ஹைப்பர் சோனிக் தொழில்நுட்ப செயல்பாடு வாகனம் சோதனை

இந்தியா hypersonic technology demonstrator vehicle (HSTDV)-ஐ திங்கள் அன்று ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து சோதனை செய்துள்ளது.

டிஆர்டிஓ மேம்படுத்திய இந்த HSTDV ஹைப்பர்சோனிக் புலோபல்சன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது ஆகும்.இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.உள்நாட்டிலேயே இதுபோன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது இந்தியாவின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது ஆகும்.

இந்த சோதனையை சாதனையாக்கிய அறிவியலாளர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது.இதில் ஸ்கிராம்ஜெட் புரோபல்சன் பொருத்தப்பட்டிருக்கும்.32கிமீ உயரத்தை வெறும் 20நொடிகளில் செல்லக்கூடியது.

இந்த சோதனை வெற்றி மூலம் இந்த ஸ்கிராம்ஜெட் புரோபல்சன் உதவியுடன் நமது டிஆர்டிஓ மிக குறைந்த வருடங்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்க முடியும்.

வான் பாதுகாப்பு அமைப்புகளில் இதுபோன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இடைமறிப்பது கடினம்.

அமெரிக்கா,ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே இதுபோன்ற தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன.