விசால் விமானம்தாங்கி கப்பல் திட்டத்தை கைவிடுகிறதா இந்தியா ?

  • Tamil Defense
  • September 20, 2020
  • Comments Off on விசால் விமானம்தாங்கி கப்பல் திட்டத்தை கைவிடுகிறதா இந்தியா ?

ஒரு புறம் சீனா தனது கடற்படை பலத்தை அதிகரித்து வரும் வேளையில் இந்தியா தனது இரண்டாவது உள்நாட்டிலேயே விமானம் தாங்கி கப்பல் கட்டும் திட்டத்தை கைவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது இந்தியா விக்ராந்த் எனும் விமானம் தாங்கி கப்பலை கட்டி வருகிறது.தற்போது தான் பேசின் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த கப்பல் படையில் இணைய இன்னும் குறைந்தது மூன்று வருடங்களாவது ஆகும்.

தளபதி பிபின் ராவத் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த படை தளபதியாக பதவியேற்ற பிறகு இந்தியக் கடற்படைக்கு மூன்றாவது கப்பல் கட்ட விரைவில் அனுமதி கிடைக்காது எனவும் அதற்கு பதிலாக கடற்படையின் நீரடி படைப்பிரிவு பலப்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார்.

தற்போது இந்தியாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பல் மட்டுமே உள்ளது.

ஒரு விமானம் தாங்கி கப்பலை கட்டி பராமரிப்பது என்பது ஆக செலவு மிகுந்த பணி ஆகும்.மேலும் அவை தனியாக இயங்க முடியாது.மேலும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு எளிதாக இலக்காக விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன.

பட்ஜெட் குறைவாக உள்ளதால் இந்த திட்டம் செயல்படுத்துவது கடினமாக உள்ளது.

மறுபுறம் சீனா ஆறு விமானம் தாங்கி கப்பல்கள் என்ற திட்டத்துடன் வேகமாக செயல்பட்டு வருகிறது.