தற்காத்து கொள்ள வீரர்கள் துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி-இந்திய சீன எல்லை விவகாரத்தில் முடிவு

  • Tamil Defense
  • September 25, 2020
  • Comments Off on தற்காத்து கொள்ள வீரர்கள் துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி-இந்திய சீன எல்லை விவகாரத்தில் முடிவு

ஜீன் 15 கல்வான் தாக்குதலை போல சீனா மீண்டும் இந்திய வீரர்களின் எண்ணிக்கையை விட அதிக அளவிலான வீரர்களை கொண்டு தாக்கினால் இந்திய வீரர்கள் துப்பாக்கி பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக இந்தியா சீனாவிடம் கூறியுள்ளது.

இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் எல்லையில் துப்பாக்கிகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.ஆனால் கல்வான் தாக்குதல் போல மேலும் ஒரு தாக்குதலை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என கூறியுள்ளது.

இருநாடுகளும் பின்வாங்குவதற்கு பதிலாக படைகளை குவித்த வண்ணமே உள்ளனர்.இந்த மோதல் குளிர்காலம் முழுதும் தொடர வாய்ப்புள்ளது.சீனா வெளியேறுகிறது என இந்தியா உறுதிபட அறிந்தால் மட்டுமே இந்தியா படைகளை விலக்கும்.