இறுதி செய்யப்பட்ட ஏகே-203 வாங்கும் ஒப்பந்தம்

  • Tamil Defense
  • September 4, 2020
  • Comments Off on இறுதி செய்யப்பட்ட ஏகே-203 வாங்கும் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இரஷ்ய பயணத்தின் போது ஏகே-203 வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது இந்திய இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ள பழைய இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக இந்த ஏகே-203 துப்பாக்கிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட உள்ளது.

இராணுவத்திற்கு தற்போது 770,000 AK-203 துப்பாக்கிகள் தேவையாக உள்ளது.அவற்றில் 100,000 நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு மற்றவை இந்தியாவில் தயாரிக்கப்படும்.

இந்த 7.62×39 mm துப்பாக்கி உத்திரபிரதேசத்தில் உள்ள கோர்வா ஆர்டினன்ஸ் தொழில்சாலையில் தயாரிக்கப்படும்.

ஒரு துப்பாக்கியின் விலை $1,100 என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.