இந்தியா சீனா பிரச்சனையை பயன்படுத்தி பாகிஸ்தான் ஏதேனும் சாகசம் செய்ய முயன்றால் இழப்புகள் கடுமையாக இருக்கும் என தளபதி ராவத் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா அனைத்திற்கும் தயாராக இருப்பதாகவும் ,மேற்கு முனையில் பாக் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலடி வியூகம் தயாராகவே உள்ளது என தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய-அமெரிக்கா வியூக ஒத்துழைப்பு மாநாட்டில் ஆன்லைன் வழியாக அவர் கலந்து கொண்டார்.அப்போது தான் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
மேலும் பாக் பயங்கரவாதிகள் உதவியுடன் இந்தியா மீது மறைமுக போரை நடத்தி வருவதாகவும் கூறினார்.