அருணாச்சல் விரையும் துணை இராணுவப் படைகள்

  • Tamil Defense
  • September 3, 2020
  • Comments Off on அருணாச்சல் விரையும் துணை இராணுவப் படைகள்

இந்தியா சீனப் பிரச்சனை எந்த நேரத்திலும் போராக வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது.இதை ஏன் உறுதியாக கூறுகிறேன் என்றால் பேச்சுவார்த்தைகள் பலனளிக்காதது தான்.பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமே இல்லாமல் முடிவு இல்லாமல் முடிந்து வருகிறது.

முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொண்ட சில விசயங்களை கூட சீனா மீறியுள்ளது.அப்படி ஒரு சம்பவம் தான் ஆக29/30 இரவு நடந்த சம்பவம்.இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீனப்படைகளை இந்திய வீரர்கள் தடுத்து விரட்டினர்.

இதற்கு மறுநாள் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே மீண்டும் எல்லையில் ஊடுருவ முயன்றது சீனா.தற்போது எல்லையின் பல்வேறு பகுதிகளில் மோதல் ஏற்படும் சூழல் உள்ளது.

தற்போது இந்திய அரசு இந்தோ-திபத் எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் சசாஸ்திர சீம பால் படை வீரர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.எல்லையில் உட்சபட்ச உசார் நிலையில் இருக்க வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு இராணுவம் தனது படைப் பிரிவுகளை அனுப்பி வருகிறது.இராணுவப்படைகளுக்கு ஆதரவாக தற்போது மேலதிக சசாஸ்திர சீம பால் படைப் பிரிவுகளை அருணாச்சல பிரதேசத்திற்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.