
இந்திய சீன எல்லைப் பிரச்சனை முற்றி வரும் வேளையில் அருணாச்சலின் அப்பர் சுபன்ஸ்ரீ மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை சீனப்படைகள் பிடித்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டகின் என்ற பிரிவை சேர்ந்த ஐந்து பேரையும் நாச்சோ எனும் பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து பிடித்து சென்றுள்ளனர்.இவர்கள் காட்டுப் பகுதிக்கு வேட்டையாட சென்றதாக பிடித்து செல்லப்பட்டவரின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.