
தற்போது விமானப்படையில் உள்ள பத்து பெண் விமானிகளில் ஒரு விமானி விரைவில் ரபேல் ஸ்குவாட்ரானில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 10 அன்று அம்பாலா தளத்தில் ஐந்து ரபேல் விமானங்களும் படையில் இணைக்கப்பட்டது.தற்போது ரபேல் விமானங்கள் லடாக்கில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றன.
அக்டோபர் மற்றும் டிசம்பரில் மேலதிக ரபேல் விமானங்கள் வர உள்ளன.தேர்தெடுக்கப்பட்ட பெண் விமானி குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.ஆனால் அவர் ஏற்கனவே மிக்-21 விமானத்தில் பறந்து பயிற்சி பெற்றவர் ஆவார்.