
இந்தியாவின் ஆர்டினன்ஸ் தொழில்சாலையின் தரம் குறைந்த வெடிபொருள்களால் மாதம் ஒரு இராணுவ வீரர் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுதவதாக இராணுவம் கூறியுள்ளது.
இந்த தவறான தரம் குறைந்த அம்யூனிசன்களால் வீரர்களின் உயிரிழப்பு அல்லது காயம் அல்லது அந்த அம்யூனிசனை பயன்படுத்தும் துப்பாக்கிகள் அல்லது ஆர்டில்லரிகள் இழப்பு ஏற்படுதவதாக இராணுவம் கூறியுள்ளது.
2020ல் மட்டும் தரம் குறைவான வெடிபொருள்கள் வெடித்ததில் 13 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.2019ல் மட்டும் நடைபெற்ற 16 விபத்துக்களில் 28 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
2018ல் 78 சம்பவங்களில் 43 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.2017ல் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார் மற்றும் 18 வீரர்கள் காயமடைந்துள்ளனர்
2016ல் மட்டுமே துரதிர்ஷ்டவசமாக 19 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.28 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.2014-19 காலகட்டத்தில் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டிருந்த 658.58 கோடிகள் மதிப்பிலான அம்யூனிசன்கள் டிஸ்போஸ் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பழுதான தவறான குண்டுகளை பயன்படுத்துவதால் தான் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக மூத்த இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
இதனால் பல நாடுகள் ஆர்டினன்ஸ் தொழில்சாலை தயாரிப்பு வெடிபொருள்களை வாங்குவதே இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.