
லைன் ஃஆப் ஆக்சுவல் கன்ட்ரோல் எனப்படும் எல்லைக் கோட்டை சீனா கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும் என சீனாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி மோதல் நடைபெற சாத்தியமுள்ள பகுதிகளில் இருந்து சீனா வெளியேற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா தனது முன் எல்லைப் புற பகுதிகளை காக்க உறுதியுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் போது பேசிய அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் , சீன வீரர்கள் எல்லையில் ஆக்ரோசமாக நடந்து எல்லைக் கோட்டை மாற்ற முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன் இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட விதிமுறைகளை சீனப்படைகள் மீறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.