
இந்திய சீன எல்லை மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் சீனா இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கை அங்கீகரிக்கவில்லை என கூறியுள்ளது.
எல்லையில் போரும் இல்லை அமைதியும் இல்லை என்ற இந்திய விமானப்படை தளபதி பதாரியா அவர்களின் பேச்சுக்கு பிறகு இந்த செய்தியை சீனா வெளியிட்டுள்ளது.
லடாக்கை இந்தியா சட்டவிரோதமாக வைத்துள்ளதாக கூறியுள்ளது.மேலும் இங்கு கட்டுமானங்கள் மேற்கொள்வது எதிரானது எனவும் கூறியுள்ளது.
இராணுவப் படைகள் எதற்கும் தயாராகவே உள்ளன என கருத்து தெரிவித்துள்ளார் விமானப்படை தளபதி பதாரியா அவர்கள்.எதிர்காலத்தில் எந்த மோதலாக இருந்தாலும் வான் சக்தி இன்றியமையாதது எனக் கூறியுள்ளார்.