இன்னும் சீனக்கட்டுப்பாட்டில் உள்ள ஃபிங்கர் 4 ஏரியா

  • Tamil Defense
  • September 3, 2020
  • Comments Off on இன்னும் சீனக்கட்டுப்பாட்டில் உள்ள ஃபிங்கர் 4 ஏரியா

பங்கோங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியின் முக்கியமான உயர்மலைப் பகுதிகள் இந்திய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஃபிங்கர் 4 மலைப் பகுதி இன்னும் சீனப்படைகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

ஃபிங்கர் 4 மலைமுகடு வரிசையில் சீனப்படைகள் அமர்ந்திருந்தாலும் சீனப்படைகளுக்கு அழுத்தம் தரும் வகையில் இந்தியப் படைகள் அருகே உள்ள உயர்மலைப் பகுதிகளில் தங்களது நிலையை வலுப்படுத்தியுள்ளனர்.

பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் எதுவுமே பலனளிக்காத வேளையில் தற்போது எல்லை பதற்றத்துடனே காணப்படுகிறது.தெற்கு ஏரி பகுதியில் தற்போது இந்திய இராணுவத்திற்கு சாதகமான நிலையை நிலவுகிறது.

தெற்கு பகுதியில் சில மலைப் பகுதிகள் இந்திய படைகள் கட்டுப்பாட்டில் இருப்பதால் சீன கட்டுப்பாடு பகுதியில் இருக்கும் மோல்டோ காரிசன் மற்றும் ஸ்பங்குர் கேப் பகுதிகளில் இந்தியப் படைகள் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியும்.

இதே போல தான் பிங்கர் 4 மலைப்பகுதிக்கு அருகே இருக்கும் உயர்பகுதிகளில் இந்திய இராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரேச்சின் லா உயர்மலைப் பகுதிகள் தற்போது இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இது நமது இராணுவத்திற்குமிகப்பெரிய பலத்தை கொடுக்கும்.இதற்காக தான் சீனா தற்போது புலம்பி வருகிறது.