இந்திய பெருங்கடலில் நுழைந்த சீன கடற்படை ஆராய்ச்சி கப்பல்-கண்காணிக்கும் இந்திய கடற்படை

  • Tamil Defense
  • September 17, 2020
  • Comments Off on இந்திய பெருங்கடலில் நுழைந்த சீன கடற்படை ஆராய்ச்சி கப்பல்-கண்காணிக்கும் இந்திய கடற்படை

கடந்த மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் லடாக் பிரச்சனை உச்சத்தில் இருந்தே போது சீனக் கடற்படையின் கண்காணிப்பு ஆராய்ச்சி கப்பல் ஒன்று நுழைந்தது.

யுவான் வாங்க் ரக கப்பலான இது மலாக்கா நீரிணை வழியாக கடந்த மாதம் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தது.இந்த கப்பலின் நடமாட்டத்தை இந்திய கடற்படை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வந்தது.

இந்திய கடற்படையின் தொடர்ந்த கண்காணிப்பின் காரணமாக அந்த கப்பல் சில நாட்களுக்கு முன் சீனா திரும்பியது.இது போன்ற கப்பல் அடிக்கடி இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்து இந்திய கடற்சார் எல்லை குறித்து தகவலை சேகரித்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளது.

கடந்த டிசம்பரில் ஷி யான் 1 என்ற கப்பல் இதே போன்ற பணியில் அந்தமான் பகுதியில் ஈடுபட்டிருந்தது.இதை நமது கண்காணிப்பு விமானம் ஒன்று கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பல் உதவியுடன் சீனா அந்தமான் பகுதியில் இந்திய கடற்படையின் நடமாட்டத்தை இந்த கப்பல் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இதை கண்டறிந்த இந்திய கடற்படை இந்த கப்பலை விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.