மறுப்பா ? ஏற்பா ? இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பை விரும்பும் சீனா பாதுகாப்பு அமைச்சர்
1 min read

மறுப்பா ? ஏற்பா ? இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பை விரும்பும் சீனா பாதுகாப்பு அமைச்சர்

தற்போது SCO நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் இரஷ்யா சென்றுள்ளார்.இந்த கூட்டம் ஒருபுறம் இருக்க இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரை சீன அமைச்சர் சந்திக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

SCO நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தற்போது இரஷ்யாவில் உள்ளனர்.இந்தியா,பாகிஸ்தான்,சீனா,கசகஸ்தான்,கிர்கிஸ்தான்,இரஷ்யா,தஜிகிஸ்தான்,உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் SCO வில் உள்ளன.

இதற்கு முன் இரஷ்ய வெற்றி தின கொண்டாட்டத்தின் போதும் இந்திய அமைச்சரை சந்திக்க விரும்புவதாக சீனா கூறியது.ஆனால் சந்திப்புகள் ஏதும் நடைபெறவில்லை.

தற்போது இந்தியா சீனாவின் அழைப்பை ஏற்குமா நிராகரிக்குமா என்று தெரியவில்லை.காரணம் இரு நாடுகளும் எல்லையில் மோதல் போக்கில் உள்ளன.

கடந்த நான்கு மாதங்களாக எல்லையில் நிலவும் பிரச்சனைகளுக்கு சீனாவே நேரடி காரணம் என இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் அவர்கள் கூறியுள்ளார்.

பிரச்சனையை சுமூகமாக தீர்க்க இன்னும் கள கமாண்டர்கள் சீன கமாண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.