எல்லையில் ஒலிப்பெருக்கி வைத்து பஞ்சாபி பாடல்களை ஒலிக்க செய்யும் சீன இராணுவம்

  • Tamil Defense
  • September 17, 2020
  • Comments Off on எல்லையில் ஒலிப்பெருக்கி வைத்து பஞ்சாபி பாடல்களை ஒலிக்க செய்யும் சீன இராணுவம்

இந்திய சீன எல்லையில் பணிபுரியும் வீரர்களின் கவனத்தை திசைதிருப்பும் விதமாக எல்லையில் ஒலிப்பெருக்கிகளை வைத்து சீன இராணுவம் பஞ்சாபி பாடல்களை ஒலிப்பரப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனா இதற்கு முன்பும் இதுபோல செய்துள்ளது.

1962 போர் தொடங்குவதற்கு முன்பும் இதுபோல பாலிவுட் பாடல்களை சீன ஒலிக்கச் செய்துள்ளது.இதன் மூலம் தங்களுக்கு இந்திய மொழி தெரியும் என்பது போல சித்தரிக்க முயல்கிறது.

வீரர்களை மனரீதியாக பாதிக்க வைக்க இதுபோன்ற செயல்களை சீனா செய்கிறது..