
இரு நாடுகளின் இராணுவங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே ஆகஸ்டு 31 இரவும் சீனப்படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றுள்ளன.இதை இந்திய இராணுவம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.
இந்திய இராணுவ வீரர்களின் சரியான நடவடிக்கையால் எல்லைக் கோட்டை மாற்ற முயன்ற சீனாவின் எண்ணம் நடைபெறாமல் போனதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா அவர்கள் கூறியுள்ளார்.
சீனாவின் இதுபோன்ற செயல்கள் அமைதியை தான் குழைக்கும் என அவர்கூறியுள்ளார்.கடந்த மூன்று மாத பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட முடிவை சீனா தற்போது மீறி வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.