பெரிய அளவில் ஆயுதங்கள் மற்றும் வீரர்களை குவித்துள்ள சீனா- பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்

  • Tamil Defense
  • September 17, 2020
  • Comments Off on பெரிய அளவில் ஆயுதங்கள் மற்றும் வீரர்களை குவித்துள்ள சீனா- பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்

இராஜ்யசபாவில் கிழக்கு லடாக் பிரச்சனை குறித்து விளக்கி பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் இந்த எல்லைப் பிரச்சனையை இந்தியா அமைதியான முறையில் தீர்க்க நினைப்பதாக கூறியுள்ளார்.அதே நேரம் எல்லைப் பகுதியை காக்க எந்த ஆக்சனுக்கும் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.அவர் பேசியவை..

1)இந்தியா-சீனா இடையே இருந்த வரலாற்றுக் கால எல்லைக் கோட்டை சீனா ஏற்க மறுக்கிறது.எல்லைக் கோடு தீர்க்கமாக வரையறுக்கப்படாத காரணமும் உள்ளது.மேலும் இது குறித்து 1950 மற்றும் 60களில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் முடிவு எட்டப்படவில்லை.எல்லைக் கோடு தொடர்பாக இரு நாடுகளும் வெவ்வேறு கருத்துக்களை கொண்டுள்ளன.

2)லடாக்கில் சீனா இதுவரை 38000 சதுர கிமீ வரை ஆக்கிரமித்துள்ளது.தவிர அருணாச்சலில் 90000சகிமீ பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகிறது.

3)எல்லை தொடர்பாக பிரச்சனை உள்ளதாக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.பேச்சுவார்த்தை மூலமாக இரு நாடுகளும் பேசி தீர்க்கவும் முடிவு செய்துள்ளன.

4)இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட எல்லைக் கோடு என்பது இல்லை.எனவே பிரச்சனையை பேசி தீர்க்க இந்தியா மற்றும் சீனா பல்வேறு ஒப்பந்தங்களை ஒப்புக்கொண்டுள்ளன.

5)தற்போது சீனா ஒப்பந்தங்களை மீறியுள்ளது.அதிக அளவிலான ஆயுதங்களை எல்லையில் குவித்துள்ளது.முக்கிய ஆழ் பகுதிகளிலும் சீனா துருப்புகளை குவித்துள்ளது.கோக்ரா,கோங்கா லா மற்றும் வடக்கு ,தெற்கு பங்கோங் ஆகிய பகுதிகளில் வீரர்களை குவித்துள்ளது.இதற்கு எதிராக நாமும் படைகளை குவித்துள்ளோம்.இதற்கு மேல் தகவல்களை பொதுவாக வெளியிட முடியாது என கூறியுள்ளார்.

6)கோரானா காலத்திலும் இந்தோ திபத் படை மிக துரிதமாக செயல்பட்டுள்ளது.வீரர்களின் பணி பாராட்டுக்குரியது.